மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர் போன்றவற்றை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். உள்ளூர் செய்திகளை சுடச்சுட தருவதற்காக, ‘கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட்’ என்ற வாரப்பத்திரிகையை இவர் தொடங்கினார். அந்த பத்திரிகைக்கு அவரே ஆசிரியர், அச்சுக் கோர்ப்பவர், நிருபர், வெளியிடுபவர், விற்பனையாளர் எல்லாம். சில எழுத்துப் பிழைகள் தவிர பத்திரிகை நன்றாக இருப்பதாக ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகை பாராட்டியது. உலக வரலாற்றிலேயே ரயிலில் அச்சடிக்கப்பட்ட முதல் பத்திரிகை அதுதான். 15 வயது சிறுவன் பத்திரிகை ஆசிரியராக இருந்து வெளியிட்ட பத்திரிகையும் அதுதான். இதுபோல் உங்களிடம் தன்னம்பிக்கை உள்ளதா... நீங்களும் பல சாதனைகள் செய்யலாம்.