புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2021 02:10
கோவை : புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவை பேரூர் மூலக்கரை ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் கோயிலில், புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி தாயார் பெருமாள் அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவை க.க.,சாவடி தெற்காலூர் ஸ்ரீ பழனியாண்டவர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி, ராமர், லட்சுமணன், சீதாதேவி சகிதமாய் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா காரணமாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படவில்லை.