சபரிமலை மண்டல, மகர விளக்கு தரிசன ஆன்லைன் முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2021 09:10
சபரிமலை: சபரிமலை 2021 - 22 மண்டல, மகர விளக்கு கால சீசன் தரிசனத்துக்கான முன்பதிவு நேற்று இரவு துவங்கியது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் துவங்கவுள்ளது. இதற்கான தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று இரவு துவங்கியது. தினமும் எட்டு நேர ஒதுக்கீட்டில், 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலை ஆன்லைன் புக்கிங் இணையதளத்தில் விபரங்களை பதிவேற்றம் செய்து, போட்டோ அப்லோடு செய்து முன்பதிவு செய்யலாம்.முன்பதிவு சீட்டு, இரண்டு தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி., நெகட்டிவ் சான்றிதழுடன் தரிசனத்துக்கு செல்ல வேண்டும். 61 நாட்களுக்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.