பதிவு செய்த நாள்
16
அக்
2021
04:10
நெகமம்: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, நெகமம் ராமலிங்கசவுடாம்பிகை அம்மன் கோவிலில் கத்தி போடுதல் திருவிழா நேற்று நடந்தது.நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, நெகமம் ராமலிங்கசவுடாம்பிகை கோவிலில், தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விரதமிருந்து, பக்தர்களும் அம்மனை வழிபட்டனர்.நேற்று முன்தினம், சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான நேற்று, ராமலிங்க சவுடாம்பிக்கை, சவுடம்மன் அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து, நேற்று காலை, 11:00 மணிக்கு, கத்திபோடுதல் திருவிழா நடந்தது. பக்தர்கள் அம்மனின் பெயரை உச்சரித்து, தோள், மார்பு பகுதியில் கத்தியால் ரத்தக்காயம் ஏற்படுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.விநாயகர் கோவிலில் இருந்து, ராமலிங்கசவுடாம்பிகை அம்மன் கோவில் வரை நடந்த ஊர்வலத்தில் விரதமிருந்த பக்தர்கள் கத்தியால் தங்களை உடலை வருத்தியபடி, தீசுகோ வேசுகோ, என அம்மனை வேண்டினர். நேற்று மாலை அம்மன் ஊர்வலமும், இன்று, சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜையுடன் நவராத்திரி பண்டிகை நிறைவு பெறுகிறது.