தஞ்சாவூர்: தஞ்சாவூர், நகர மையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளி பெண்கள், துப்புரவு பணியாளப் பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரை வணங்கிக் கௌரவப்படுத்தப்பட்டனர். மேலும் 14 தேவ தேவிகள் மடத்தில் வந்து அருள்பாலித்தனர். கிராம மையத்தில் குழந்தைகள் தங்கள் தாய் தந்தையரை பூஜை செய்து வணங்கினர். இதில் தாய் தந்தையர் தங்கள் குழந்தைகளின் மரியாதையைக் கண்டு நெகிழ்ந்து போயினர்.