வில்லியனுார் : ஐப்பசி முதல் நாள் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு வில்லியனுார் பகுதியில் உள்ள சிவாலயங்களில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் நந்திகேஸ்வரர், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று, சுவாமி உள்புறப்பாடு நடந்தது.திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் மூலவருக்கும், நந்திக்கும் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பிறகு, சுவாமி உள்பிரகார உலா நடைபெற்றது. ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வி.மணவெளி திரிவேணி நகரில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திவேணீஸ்வரர் கோலில், ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில், வில்லியனுார் மெயின்ரோடு அனந்தம்மாள் சத்திரம் ஏகாம்பரநாத மகேஸ்சுவரர் கோவில், உள்ளிட்ட பல்வேறு சிவாலாயங்களில் நடந்த பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.