பதிவு செய்த நாள்
01
நவ
2021
02:11
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மர சிற்பத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால், மர சிற்பக லைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அண்ணாநகர், தென்கீரனுார், ஜெ .ஜெ ., நகர், திருக்கோவிலுார், தக டி, கூத்தனுார், சின்னசேலம் பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மர சிற்பங்கள் தயாரிக்கும் தொழிலில் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். சந்தனம், இலுப்பை , மாவிலங்கை, வாகை , அத்தி, வேங்கை , ஈட்டி போன்ற மரங்களில் சுவாமி சிலைகள் மற்றும் கோவில்களுக்கு தேவையான ரதம் ,
உற்சவர் வாகனங்கள், காவடி, கோவில் கதவுகள் செய்து வருகின்றனர். இங்கு செய்யப்படும் சுவாமி சிலைகள் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவதற்கு, கட ந்த 2013ம் ஆண்டில், தமிழக அரசின் பூம்புகார் தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக்கழகம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசின் தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை , புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதனால், மர சிற்ப கலைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.