‘குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்’ என்ற பழமொழி தங்கத்தின் பெருமையை சொல்வதாக நினைக்கிறோம். ஆனால் இது தவறாகச் கையாளப்படுகிறது. ‘மோதகக் கையால் குட்டுப்பட வேண்டும்’ என்பதே சரி. விநாயகருக்கு விருப்பானது மோதகம் (கொழுக்கட்டை).அதை வைத்திருப்பவர் என்பதால் விநாயகரின் துதிக்கைக்கு ‘மோதகக்கை’ என்று பெயர். யானையிடம் ஆசி பெறும் போது தும்பிக்கையால் தலை மீது குட்டுவது போல இருக்கும். இதையே இப்பழமொழி சுட்டுகிறது.