உயிர்களைக் கொன்ற பாவம் தின்றால் போகும் என்று நினைத்து மாமிசம் உண்ணுகிறான் மனிதன். அதற்கு தண்டனையாக நரக லோகம் சென்ற பின் எமதுாதர்கள் கூரிய வாளால் மனிதர்களின் தசையை அறுப்பர். அதைத் தின்னச் சொல்லி அடிப்பதோடு, வாயிலும் திணிப்பர். இதை திருப்புகழில், ‘கருவியதனால் அறிந்து சதைகள் தனையே அரிந்து கரிய புனலே சொரிந்து” என சொல்கிறார் அருணகிரிநாதர். இதிலிருந்து தப்பிக்க முருகனைச் சரணடைவது ஒன்றே வழி.