Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் கோவிலில் தீபாவளி ... சீதா லட்சுமி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு சீதா லட்சுமி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பழநியில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

04 நவ
2021
05:11

பழநி: பழநியில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.

பழநி மலைக்கோயிலில் நவ.4 முதல் நவ.,10 வரை கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது. பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையில் மூலவர் ஞான தண்டாயுதபாணி சுவாமி, உற்சவர் சின்ன குமாரசாமி, சண்முகர், நவ வீரர்கள், துவாரபாலகர்கள், மயில்வாகனம் ஆகியவற்றுக்கு காப்புக் கட்டுதல் நடைபெற்றது. இதில் கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், பழநி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியநாயகியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் உள்ள கோவில் யானை கஸ்தூரி யானைப் பாதை வழியாக கந்தசஷ்டி விழாவிற்காக மலைக்கோயில் சென்றது. சூரசம்ஹாரம் நடைபெறும் நாள்வரை யானை கஸ்தூரி மலைக்கோயிலில் ஆறு நாட்கள் தங்கி இருக்கும். பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி கோயில், மலைக்கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு பின் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவங்கினர்.

கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வாக நவ.9 அன்று மாலையில் கிரிவீதிகளில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். நவ.,10 காலையில் மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாண உற்ஸவமும், மாலையில் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வும், திருக்கல்யாண நிகழ்வும் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. விழா நிகழ்ச்சிகள் நடைபெறாத சமயங்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar