Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேரை ... ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலய விவகாரங்களுக்கு அறங்காவலரே பொறுப்பு! நேர்மையானவர்களை நியமிக்குமா அரசு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2021
06:11

 சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அறங்காவலர்களை நியமிப்பதற்கு முன், அவர்களை தேர்வு செய்ய மாவட்ட அறங்காவலர் குழு ஏற்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:அறங்காவலர் நியமனத்துக்காக, தமிழக கோவில்கள் வருமானம் அடிப்படையில், ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் - 2 லட்சம் ரூபாய் வரை; 2 லட்சம் - 10 லட்சம் ரூபாய் வரை; 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கோவில்கள் என, மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இதில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோவில்களுக்கான அறங்காவலர்களை அரசே நியமிக்கும். 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள கோவில்களுக்கு, மாவட்ட அறங்காவலர் குழு அமைத்து, அதன்வழியாக அறங்காவலர்களை தேர்வு செய்யலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். மாவட்ட அறங்காவலர் குழு, ஒவ்வொரு கோவிலுக்கும் 10 பேர் பட்டியலை அளிக்கும். அதில் ஐந்து பேர், அறங்காவலராக நியமிக்கப்படுவர்.

இந்த குழுவே, 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள கோவில்களுக்கும், அறங்காவலர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்பும்.அதை அடிப்படையாக வைத்து, மண்டல அளவில் இணை ஆணையரே அறங்காவலரை நியமிப்பார்.மாவட்ட அறங்காவலர் குழுவை அமைக்க, 2019ல் விதிகள் ஏற்படுத்தப்பட்டன. எக்காரணம் கொண்டும் கோவில் அறங்காவலராக அரசியல்வாதிகளை நியமனம் செய்யக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுட்டுள்ளது.

இதையடுத்தே, மாவட்ட அறங்காவலர் குழு பரிந்துரைப்படி நியமிக்கலாம் என, அரசு முடிவு எடுத்துள்ளது. தற்போது, மாவட்ட அறங்காவலர் குழு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

* ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள எல்லா கோவில்களிலும், அறங்காவலரை நியமிக்கும் பொறுப்பு இந்த குழுவுக்கு தான் உள்ளது

* குழுவில், ஒரு தலித், ஒரு பெண் உட்பட, ஐந்து உறுப்பினர்கள் இருப்பர்

* குழு உறுப்பினராக தகுதியுடைய யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். கோவில் நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை

* குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். அதன்பின், புது குழு தேர்வு செய்யப்படும். ஆனால், ஒரு கோவில் அறங்காவலர் ராஜினாமா செய்து விட்டாலோ, இறந்து விட்டாலோ, புதிய அறங்காவலரை தேர்வு செய்து கொடுக்கும் பணி, மாவட்ட அறங்காவலர் குழுவுக்கு தான் உள்ளது.

அதனால், அந்த குழு எப்போதும் இருக்கும். தேவையான போது கூடி, தன் வேலையை செய்யும். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருக்கான, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் தான் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் பயன்பாடு வந்துவிட்ட பின், இது சரியான அணுகுமுறை அல்ல. இது தவறுக்கு வழிவகுக்கலாம்.

அறங்காவலர் யார்?

* அறங்காவலர் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். தேவைப்பட்டால் மீண்டும் நியமிக்கலாம். ஆனால், அவரது கடந்த கால செயல்பாடுகளை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்

* அறங்காவலர் குழுவினர் அறிவிப்பதை தான் செயல் அலுவலர் செயல்படுத்த வேண்டும். 90 நாட்களுக்கு ஒரு முறை அறங்காவலர் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்

* அறங்காவலர்களே, கோவில் நிர்வாகத்தை முழுமையாக கவனிப்பர். கோவில் நிர்வாகத்தில் ஏற்படும் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்குமே அவர்களே பொறுப்பு. நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர் என அனைத்து பணி நியமனத்திற்கும் அறங்காவலர்களே பொறுப்பு

* கோவில் வரவு, செலவு கணக்கை பதிவிடுவது, தணிக்கை அதிகாரிகளுக்கு பதிலளிப்பது உள்ளிட்ட எல்லாவற்றையும் அறங்காவலர்கள் தான் செய்ய வேண்டும். அறங்காவலர்கள் தான், கோவில் நிதியையும் பராமரிக்க வேண்டும். கோவில் உபரி நிதியை என்ன செய்ய வேண்டும் என்பதை கூட, அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தக்கார் என்பது யார்?

ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சில மாதங்களுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில், மாவட்ட அறங்காவலர் குழுவை அமைத்தனர். ஆனால், அறங்காவலர்களை நியமனம் செய்யவில்லை. அறங்காவலர் இல்லாத கோவில்களில் தக்காரை நியமனம் செய்து, கோவில் நிர்வாகத்தை நடத்தினர். தக்கார் என்பதற்கு தகுதியான நபர் என்றே பொருள். இந்த தக்கார் பதவி தற்காலிகம் தான். 90 நாட்களுக்கு மேல், தக்காராக ஒருவர் செயல்பட முடியாது.10 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கார் அனுமதியோடு, கோவில் நிர்வாக அதிகாரிகள், உபரி நிதி உள்ளிட்ட நிதியை, சொகுசு காரியங்களுக்கும், தேவையில்லாத பணிகளுக்கும் செலவிட்டுள்ளனர்.

கோவில் உபரி நிதி உள்ளிட்ட கோவில் கணக்கை, வெளியாரால் தணிக்கை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. ஆனால், உள் தணிக்கைக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டு, பல தவறுகளை மூடி மறைத்துள்ளது. நேர்மையான அறங்கா வலர்கள் நியமிக்கப்பட்டால், இதுபோன்ற விஷயங்கள் வெளியே வரும். பல அதிகாரிகள் தண்டிக்கப்படுவர்.

14 லட்சம் தவறுகள்

உதாரணத்துக்கு, திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு 10 ஆண்டுகளில், காணிக்கையாக வந்த மாடுகள் எண்ணிக்கை மட்டும் 5,389. அந்த மாடுகள், கோசாலைக்கு தானமாக கொடுக்கப்பட்டதாக, கோவில் கணக்கு புத்தகத்தில் உள்ளது.ஆனால், உள் தணிக்கையில், கோசாலைகளே இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட முறைகேடுகள், புதிய அறங்காவலர்கள் வந்தால் தான் வெளிச்சத்துக்கு வரும்.

கடந்த, 1976ல், ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தை செம்மைப்படுத்த, வெளி தணிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், உள் தணிக்கை மட்டுமே நடந்து வருகிறது. 19 ஆண்டுகளில் மட்டும் உள் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட, 14 லட்சம் நிர்வாக தவறுகளுக்கு, இதுவரை தீர்வு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தகுதி என்ன?

மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மற்றும் கோவில் அறங்காவலர் நியமனத்திற்கு, ஒரே மாதிரியான விதிகள் தான் பின்பற்றப்படுகின்றன. l ஒரு கோவிலுக்கு அறங்காவலராக ஐந்து பேரை நியமிக்க வேண்டும். அதில் தலித் ஒருவர், பெண் ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டும். சில கோவில்களில், மற்ற மூன்று உறுப்பினர்களில் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர், அறங்காவலராக கட்டாயம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை, நீதிமன்ற உத்தரவு படி பின்பற்றப்படுகிறது

* மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினராக, 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஒழுக்கக்கேடு சம்பந்தமான குற்றங்களுக்காக, குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாதவராக இருக்க வேண்டும். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அந்த தீர்ப்பு மாற்றப்படாமல் இருந்தாலோ அல்லது குற்றம் மன்னிக்கப்படாமல் இருந்தாலோ, மாவட்ட அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது

* ஏற்கனவே, ஒரு கோவிலில் அறங்காவலராக இருந்து, நிர்வாக குழுவால் அல்லது அதிகாரியால் நீக்கப்பட்டிருந்தால், அவர் மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது

* ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு பணம் செலுத்த வேண்டியதிருந்தாலும், ஹிந்து மதத்தை பின்பற்றாதவராக இருந்தாலும், விண்ணப்பிக்க முடியாது. அரசு பணியில் இருப்போர், அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றுவோர், அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தனி நிறுவனங்களில் பணியில் இருப்போர், குழு உறுப்பினராக முடியாது இதே நடைமுறை தான், கோவில் அறங்காவலர் நியமனத்திலும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.அறங்காவலராக நியமிக்கப்படும் ஒவ்வொருவரும் கடவுள் பக்தி உள்ளவராக இருக்க வேண்டும்.

சம்பளம் வழங்கப்படுமா?

சோழ அரசர்கள் காலத்தில் இருந்தே, கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்யும் நடைமுறை உள்ளது. தகுதியுடைய பலரிடமும் விண்ணப்பம் பெற்று, அதில் இருந்து ஒரு சிலரை குடவோலை முறையில் தேர்வு செய்துள்ளனர்.

ஒரு முறை அறங்காவலராக தேர்வாகி, இரண்டு ஆண்டுகள் பணியில் இருந்து விட்டால், அவர்கள் மீண்டும் அப்பொறுப்புக்கு வர முடியாது என்ற நிலையும் இருந்தது. அறங்காவலர் என்பது கவுரவ பொறுப்பு என்பதால், அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமோ, சிறப்பு சன்மானமோ வழங்கப்படாது. இப்போதும் அதே நடைமுறை தான் பின்பற்றப்பட உள்ளது. கடந்த காலங்களில் அறங்காவலர் குழு கூட்டம் நடக்கும் போது, பயணப்படி மட்டும் வழங்கப்பட்டது.

தற்போது, கோவில் அறங்காவலராக நியமிக்கப்படுகிறவர், கோவிலை சுற்றி, 5 கி.மீ., துாரத்துக்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், பயணப்படி வழங்க வாய்ப்பு இல்லை. அறங்காவலர் சொந்த செலவில் தான், கோவில் நிர்வாகத்தை கவனிக்கவும், குழு கூட்டத்துக்கும் வந்து செல்லவும் வேண்டும். உயர் நீதிமன்ற ஆலோசனையின்படி, அரசியல் கலப்பு இல்லாமல் அறங்காவலர் நியமிக்கப்பட்டால், உண்மையான அறப்பணியும், இறை பணியும் நடக்கும்.
- நமது நிருபர் --

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமத் பொய்கையாழ்வார் சபை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
 சென்னை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்ய, 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை ... மேலும்
 
temple news
 வால்பாறை; புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar