பதிவு செய்த நாள்
05
நவ
2021
04:11
போத்தனூர்: நாடு முழுவதும் நேற்று தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக கடந்தாண்டு கொரோனா தொற்றால் தீபாவளி கொண்டாட்டம் களையிழந்து போனது.
அக்குறையை போக்கும் வகையில் இவ்வாண்டு நேற்று முன்தினம் இரவு முதலே, வெடிச்சத்தம் கேட்க துவங்கியது. நள்ளிரவிலும் தொடர்ந்தது. நேற்று அதிகாலையில் மக்கள் புத்தாடை உடுத்தி, தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். தொடர்ந்து அருகே வசிப்போர், உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்து கூறி, இனிப்பும் வழங்கினர். போத்தனூர் கடை வீதியிலுள்ள அருள்முருகன் கோயில், குறிச்சி பொங்காளியம்மன் கோவில், ஆண்டாள் தோட்டம் விநாயகர் கோவில், பாதாள கண்டியம்மன் கோவில், முதலியார் வீதி காமாட்சியம்மன் கோவில், சுந்தராபுரம் முத்துமாரியம்மன் கோவில், மாச்சம்பாளையம் மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தன.