பதிவு செய்த நாள்
05
நவ
2021
04:11
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் தீபாவளி திருநாளையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே பகுதியில் உள்ள அங்காளம்மன், கொங்காளம்மன், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஆதி மூர்த்தி பெருமாள் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. பின்னர் உற்சவமூர்த்தி கோயில் வளாகத்தில் ஊர்வலமாக வந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி, சிறப்பு பஜனை நடந்தது. இதேபோல பாலமலை அருள்மிகு ரங்கநாதர் கோவில், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், திருமலை நாயக்கன் பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடந்தன.