ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேத்திடல் முனீஸ்வரன் கோவில் விழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் காளைக்கு துண்டு கட்டப்பட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.