பதிவு செய்த நாள்
05
நவ
2021
04:11
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அடுத்த கிச்சகத்தியூரில் விருட்ச பீடம் உள்ளது. இங்கு நேற்று மகா லட்சுமி குபேர பூஜை நடைபெற்றது. காலை, 5:50 மணிக்கு கோ பூஜையும், 6:30 மணிக்கு விக்னேஸ்வர வழிபாடும், 27 நட்சத்திர விருட்சங்கள், அதிதேவதைகள், சித்தர்கள், நவகிரகம், பஞ்ச லிங்கம், பாதாள லிங்கத்துக்கு வழிபாடு செய்யப்பட்டது. பின்பு, 7:00 மணிக்கு மகாலட்சுமி குபேர பூஜையும், யாகமும் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. குபேர பூஜைக்கான ஏற்பாடுகளை லட்சுமி தாச சுவாமி செய்திருந்தார்.