பதிவு செய்த நாள்
05
நவ
2021
05:11
தஞ்சாவூர்: தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக, திங்களூர் சந்திரன் கோவிலில் அதிகளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
தமிழகத்தில் கொரானா முன்னெச்சரிக்கை காரணமாக, அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தன. பக்தர்கள் இன்றி ஆகம விதிப்படி சாமிக்கு அபிஷேகம் நடந்தது. இதற்கிடையில், மீண்டும் கொரோனா காரணமாக வெள்ளி,சனி,ஞாயிறு மூன்று தினங்கள் பக்தர்களுக்கு கோவிலில் அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, சரஸ்வதி பூஜை முதல், கோவில்களை முழுமையாக திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், தொடர் விடுமுறை என்பதால், தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில் நவகிரக ஸ்தலமான இரண்டாவது ஸ்தலமான திங்களூர் சந்திரன் கோவில், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து சந்திரனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது.