திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 11:00 மற்றும் மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது.ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி, சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சார்யார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனை நடக்கிறது. சர்க்கரை பொங்கல், புளிசாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், வடை படைக்கப்படுகிறது. தினம் இரவு 7:00 மணிக்கு வெள்ளி பல்லக்கில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள் பாலிக்கிறார்.