கந்தசஷ்டியின் நிறைவுநாளன்று காலை முதல் மாலை சூரசம்ஹாரம் முடியும் வரை ‘ஓம் முருகா’ என்னும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். கந்த சஷ்டிக்கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் போன்ற முருகன் பாடல்களைப் பாடலாம். பகலில் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் சூரசம்ஹாரம் முடிந்தபின் நீராடி, உணவு சாப்பிட்டு விரதத்தை நிறைவேற்ற வேண்டும். மறுநாள் பிரபலமான முருகன் கோயில்களில் நடக்கும் ‘பாவாடை நைவேத்யம்’ என்னும் பிரசாதத்தை சாப்பிடலாம்.