மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்துார் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று அணிவிக்கின்றனர். முருகப்பெருமான் தெய்வானையை மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால் மாமனாரான இந்திரன் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் சீதனமாக தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கின்றனர்.