திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குரு பெயர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2021 03:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தனி சன்னதியில் எழுந்தருளிய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.திருநகர் சித்தி விநாயகர்கோயிலில் நவக்கிரகங்களுடன் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு யாகசாலை பூஜை முடிந்து அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படியானது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.ஹார்விபட்டி பால முருகன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கும், விளாச்சேரி ஈஸ்வரன்கோயில் தட்சிணாமூர்த்திக்கும், எஸ்.ஆர்.வி.,நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் குருபகவானுக்கும் சிறப்பு யாகம், பூஜை நடந்தது.