பதிவு செய்த நாள்
14
நவ
2021
03:11
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை ஒட்டி, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்டெடுத்த தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் விளங்குகிறது. குரு குருபகவான் சனிக்கிழமை மாலை 6.21 மணிக்கு மகர ராசியிலிருந் கும்ப ராசிக்கு பெயர்ச்சி செய்தார். இதையொட்டி, கோவில் மண்டபத்தில் சிறப்பு பூஜை, யாகத்துடன் துவங்கப்பட்டது. குரு பகவானுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வகையான திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. குருபகவான் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பின், பிரகார உலா நடைபெற்றது. திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளிட்டவற்றில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.