உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் சன்னதி அருகே உள்ள தட்சிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் அபிஷேகம் உள்ளிட்டவைகள் நிறைவேற்றப்பட்டது. மஞ்சள் வஸ்திரம் அணிவிக்கப்பட்டு கொண்டை கடலை மாலை உள்ளிட்டவைகள் அணிவிக்கப்பட்டது. சிறப்பு சங்கல்ப பூஜைகள் நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பவளநிறவல்லி அம்மன் சமேத பூவேந்திய நாதர் கோயிலில் மாலை 6 மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. யாகசாலை பூஜை வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு, குரு பெயர்ச்சி நன்மை பெறும் ராசிகள் பரிகார ராசிகள் கொண்டவர்களுக்கு சிறப்பு அர்ச்சனை, சங்கல்பம் பூஜைகள், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், மகா சபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.