கனடாவிலிருந்து மீட்கப்பட்ட காசி விஸ்வநாதர் சிலை பிரதிஷ்டை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2021 11:11
வாரணாசி : கனடாவில் இருந்து 108 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட அன்னபூரணி சிலை, வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நம் நாட்டிலிருந்து வட அமெரிக்க நாடான கனடாவுக்கு 108 ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்லப்பட்ட அன்னபூரணி சிலை சமீபத்தில் மீட்டு வரப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அந்த சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும், கோவில் புனரமைப்பு பணியின் போது அகற்றப்பட்ட ஐந்து சிலைகளும் நேற்று நிறுவப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.