* தினமும் 108 முறை ‘ஸ்ரீராம ஜெயம்’ எழுதுங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும். * காலபைரவர், துர்கையை பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் கிரகதோஷம் நீங்கும். * வெள்ளிக்கிழமையில் பார்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களை வழிபட்டால் களத்திர தோஷம் தீரும். * விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் முயற்சி தடையின்றி நிறைவேறும். * அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்தல், பூப்பறித்தல் போன்றவற்றை சூரியன் உதயமான (காலை 5:45 மணிக்கு பிறகு) செய்ய வேண்டும். * கோயிலில் தரும் விபூதி, குங்குமத்தை வீட்டிற்கு எடுத்து வந்து குடும்பத்தினருக்கு கொடுத்து, மீதியை பூஜை அறையில் வைத்தால் நன்மை பெருகும். * செவ்வாய்தோறும் முருகனுக்கு செவ்வரளி போன்ற சிவப்புநிற மலர்களால் அர்ச்சனை செய்து வர செவ்வாய் தோஷம் நீங்கும். * வெள்ளிக்கிழமையில் வில்வம் பழத்தை பூஜை அறையில் வைத்து வழிபட கடன், வறுமை தீரும். * மகாவிஷ்ணுவின் கையிலுள்ள சக்ராயுதம் ‘சுதர்சனம்’ எனப்படும். நோய், எதிரி பயம், மனக்குழப்பம், திருஷ்டி போன்றவற்றில் இருந்து காக்க வல்லது சுதர்சனம். * திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தை படியுங்கள். நவகிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.