Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள் 4 ... மலையில் கோத்தர் பழங்குடிகளின் பாரம்பரிய திருவிழா மலையில் கோத்தர் பழங்குடிகளின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு; கருடசேவை விமரிசை
எழுத்தின் அளவு:
காஞ்சி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு; கருடசேவை விமரிசை

பதிவு செய்த நாள்

30 டிச
2025
05:12

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொர்க்கவாசல் திறப்பு, கருடசேவை உத்சவம் விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோபூஜையும், தொடர்ந்து, சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தனுர்மாத பூஜை, நித்யபடி, சாத்துமுறை, சொர்க்கவாசல் துவார பாலகர் துவார பூஜை நடந்தது. காலை 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் சொர்க்க வாசல் வழியாக உத்சவர் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளினார். தீப ஆராதனைக்குப்பின், திவ்ய பிரபந்தம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்ட தோட்ட மண்டபத்தில் எழுந்தருளினார்.

காலை 11:00 மணிக்கு திருமஞ்சனமும், மதியம் 2:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் நடந்தது. விழா ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இன்று காலை ரத்தின அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:30 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு மாட வீதி புறப்பாடு நடந்தது. இரவு 7:00 மணிக்கு கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். சாற்றுமறை நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டையில் ருக்மணி சத்யபாமா வேணுகோபால சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, இன்று அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசலில், வேணுகோபாலன் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் உள்ள கமலவல்லி சமேத அழகிய மணவாள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு உத்சவர் மணவாள பெருமாள் கருடவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா உலா வந்தார். மூலவர் அழகிய மணவாள பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar