கார்த்திகை பவுர்ணமி: புத்துக்கோயிலில் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2021 06:11
காரியாபட்டி: காரியாபட்டி கணக்கனேந்தலில் உள்ள புத்துக்கோயில் 3வது ஆண்டு திருவிழா நடந்தது. கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நாகம்மாளுக்கு பால்குடம் எடுத்து, அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து, கண்மலர் சாத்துதல், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பூசாரி கணேசபாண்டியன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.