* கடவுளின் திருநாமத்தை சொல்வதே வழிபாட்டில் சிறந்தது. * ஒருநிமிடத்தை கூட வீணாக்காதே. * பொறுமையாக இருப்பதே சிறந்த தவமாகும். * எதிலும் திருப்தியாக செயல்படுவதே உண்மையான மகிழ்ச்சி. * உயிர்களிடம் கருணை காட்டுவதே சிறந்த புண்ணியம். * ஆன்மிக சிந்தனை குறைந்து வருவது தான் பிரச்னைகளுக்கு காரணம். * வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை அறிந்து கொள். * உன் கடமையை ஒழுங்காக செய். * உலகில் காரணமின்றி எதுவும் படைக்கப்படவில்லை. * கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதை கேட்பது தியானம். * நல்லவர்களின் பெருமையை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. * குளிருக்கு கம்பளியை போர்த்துவதுபோல், துன்பம் அதிகரிக்கும்போது கடவுளை பற்றிக்கொள். * பிறர் நலனில் அக்கறை செலுத்து. அதுவே கடவுளின் அன்பை பெறும் வழி. * ஆசைகளை சீர்படுத்து. நல்ல பண்புகள் தானாக வளரும். * நீ விரும்பியதை வழங்க கடவுள் தயாராக இருக்கிறார். * தவறான விஷயங்களில் ஈடுபடாதே. * நல்லதை செய். உன் வாழ்க்கை மேம்படும். * பிறர் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தாதே.