பதிவு செய்த நாள்
29
நவ
2021
06:11
மதுரை : மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில் கார்த்திகை மாதம், இரண்டாவது சோம வார 108 சங்காபிஷேகம் வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை இன்று 29.11.2021 நடைபெற்றது.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக சங்கரலிங்கம் சுவாமி, சங்கர நாராயணர், கோமதி அம்மனுக்கும், எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சுவாமிகள் புது வஸ்திரங்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இன்றைய பூஜை இறைப் பணியில் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் - விஜயலக்ஷ்மி, லட்சுமி - சரவண சுந்தரம், லட்சுமி - குணசேகர பூபதி, சண்முக சுந்தரம் - ராஜேஸ்வரி குடும்பத்தினர். பக்தர்களுக்கு வெண்பொங்கல், அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர்கள் ராஜேஷ், அரவிந்தன், சங்கர நாராயணர் கோயில் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வம், அங்கப்பன், தேவதாஸ், சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.