Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 17ம் நூற்றாண்டு நடுகல் தலைவலி தீர ... ஸ்ரீரங்கத்தில் முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை ஸ்ரீரங்கத்தில் முத்து பாண்டியன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி: ஆகம ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம்
எழுத்தின் அளவு:
மதுரை சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி: ஆகம ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம்

பதிவு செய்த நாள்

11 டிச
2021
05:12

மதுரை : மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் சமய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த 04.09.2021 அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடி 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் அறிவித்தார்கள். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உடைய இந்துகளில் அனைத்து ஜாதியினரும் ஜாதிவேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு எண்.95 –ல் அறிவிக்கப்பட்ட்து, சைவ அர்ச்சகர் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வழங்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம் ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெற விரும்புபவர்கள்  உரிய விவரங்களை முழுமையாக அளித்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன்  விண்ணப்பிக்கலாம் என்று துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரகள் தமிழில் முதுநிலை பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும். இந்து சமய இலக்கியங்களிலும் தமிழகத் திருக்கோயில்கள் வரலாற்றிலும் போதிய கற்றறிவு பெற்றிருத்தல் வேண்டும். பல்கலைக் கழகம் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் தமிழாசிரியராக குறைந்தபட்சம் ஐந்து  ஆண்டுக் காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தலைமை ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூபாய் 35,000/. மேலும் விண்ணப்பதார்கள் பொதுவாக 01.12.2021 அன்று 35 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும். இந்து சமயத்தவராகவும் பின்பற்றுபவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் சைவசமயக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். நியமனங்கள் தேர்வுக்குழுவின் முடிவிற்குட்பட்டவை. விண்ணப்ப படிவத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் விண்ணப்பதார் தன் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். விண்ணப்படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது திருக்கோயில் www.maduraimeenakshi.org என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் கிடையாது.  

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மற்றும் தக்கார்,
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில். மதுரை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar