பதிவு செய்த நாள்
12
டிச
2021
07:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 9ம் நாளான இன்று (12ம் தேதி) நம்பெருமாள் முத்துக்குறிக்காக முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம், முத்தங்கி, முத்து திருவடி, முத்து ஆபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து விழா தொடங்கி, 13ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. பகல் பத்து 9ம் நாள் இன்று (12ம் தேதி) காலை, நம்பெருமாள் முத்துக்குறிக்காக முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம், முத்தங்கி, முத்து திருவடி, முத்து ஆபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 14ம் தேதி, அதிகாலை, 4:45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை திறந்து கடந்து செல்வார்.