திருப்பரங்குன்றம் கோயிலில் 9 ஆண்டுகளுக்குப்பின்பு பரிவட்டங்கள் ஏலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2021 05:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்பு பரிவட்ட இனங்கள் ஏலம் விடப்பட்டது. கோயிலில் சுவாமிகளுக்கு பரிவட்ட துண்டுகள், சேலைகள், வேஷ்டிகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். கோயியில் சுவாமிகள் பயன்பாட்டிற்க்கு போக மீதமுள்ள வைகள் செவ்வாய்க்கிழமை தோறும் ஏலம் விடப்பட்டு வந்தது. 2012-13 பிறகு அவை ஏலம் விடப்படவில்லை. கோயில் பயன்பாட்டிற்கு தவிர மீதமுள்ள பரிவட்ட இனங்களை ஒரு கால பூஜை நடக்கும் நலிவடைந்த கோயில்களுக்கும், ஆதரவற்றோருக்கும் இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்த பரிவட்ட இனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கியது போக அதிகமாக சேர்ந்ததால் அவற்றை முன்புபோல் ஏலம் விடுவதற்கு கமிஷனரிடம் கோயில் நிர்வாகம் அனுமதி பெற்றது. அதன்படி பரிவட்ட இனங்கள் இன்று கோயிலில் ஏலம் விடப்பட்டதில் ரூ. 12,620க்கு ஏலம் போனது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் (திருவிழா காலங்கள் தவிர) பரிவட்ட இனங்ங்கள் ஏலம் விடப்படும் கோயில் திருவாட்சி மண்டபத்தில் ஏலம் விடப்படும். பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்கலாம் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.