மேலூர்: சருகுவலையபட்டி வீரகாளியம்மன் கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் மந்தையில் இருந்து ஊர்வலமாக பூ தட்டுகளை ஏந்தியும்,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் சருகுவலையபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.