திருப்புல்லாணி: களிமண்குண்டு அருகே கட்டையன் வலசையில் உள்ள நொண்டிச்சாமி , சப்த கன்னியர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணியளவில் கோபுர விமானம் கலசத்தில் உத்தரகோசமங்கை நாகநாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு அலங்கார தீபாராதனைகள், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கட்டையன் வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.