பதிவு செய்த நாள்
18
டிச
2021
10:12
அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்னூர் ஐயப்பன் கோவிலில், 52ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, முதற்கால வேள்வி பூஜையும், மாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடந்தது. நேற்று மாலையில், பெருமாள் கோவிலில் இருந்து கலச தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு ஐயப்பனுக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. 19ம் தேதி காலை 11:00 மணிக்கு, யானை, குதிரை, செண்டை மேளம், ஜமாப், கேரள பூ காவடியுடன், ஐயப்ப பக்தர்களின் பஜனையுடன், புலி வாகனத்தில், சுவாமி திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.