பதிவு செய்த நாள்
18
டிச
2021
01:12
சூலூர்: சூலூர் அருகே கோர்ட் உத்தரவுப்படி, புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு வரும் கோவில்கள் இடிக்கப்பட்டன. சூலூர் அடுத்த பட்டணம் பகுதியில் குட்டை அருகில், 100 ஆண்டுகள் பழமையான வாசுதேவன், வருண பகவான் கோவில்கள் உள்ளன. அப்பகுதியை சேர்ந்த மக்கள், வழிபாடுகள் நடத்தியும், நிர்வகித்தும் வந்தனர். இந்நிலையில், மேலும் சில கோவில்களை கட்ட மக்கள் முடிவு செய்து, கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், அருகில் உள்ள தோட்டத்தின் உரிமையாளர், புறம்போக்கு நிலத்தில் கோவில்கள் கட்டப்படுவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோவில்களை இடிக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆர்.ஐ., சிவபாலன் மற்றும் வருவாய்த்துறையினர் கோவில்களை, இடித்து அகற்ற நேற்று வந்தனர். இதற்கு, அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார், மக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, மூன்று கோவில் கட்டடங்களும் இடித்து அகற்றப்பட்டன.