பதிவு செய்த நாள்
18
டிச
2021
01:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா, ராப்பத்து உற்சவத்தில் இன்று நாளில் நம்பெருமாள், ஆண்டாள் நாச்சியார் , "" ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்ற பாசுரத்திற்கு ஏற்ப, உற்சவர் மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள் 4ம் தேதி முதல், உற்சவ நாட்களில் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவத்தில் இன்று ஆண்டாள் நாச்சியார் , "" ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்ற பாசுரத்திற்கு ஏற்ப, உற்சவர் மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். 24ம் தேதி வரை ராப்பத்து நிகழ்ச்சி நடக்கும்.