பதிவு செய்த நாள்
18
டிச
2021
01:12
கோத்தகிரி: கோத்தகிரி பெத்தளா ஹெத்தையம்மன் கோவில் பிரச்சனை, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம், சுமுக தீர்வு எட்டபட்டது. கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் படு சமுதாய மக்களின் குலதெய்வமான எத்தையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கைகாரு சீமைக்கு உட்பட்ட, 19 கிராம மக்கள் திருவிழா நடத்துகின்றனர். கோவிலில் பூசாரி நியமிப்பது தொடர்பாக, சீமை மக்களுக்கும், பூசாரி தரப்பினருக்கும் இடையே, பிரச்சனை இருந்து வந்தது. வரும், 20ம் தேதி தொடங்கி, ஒரு வாரம் விழா நடக்க உள்ளது. இந்நிலையில், குன்னூர் டி.எஸ்.பி., குமார் மற்றும் கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் முன்னிலையில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இருத்தரப்பினரும் பங்கேற்றனர். முடிவில், இருதரப்பு அனைத்து குடும்பங்களில் இருந்து, வரிவசூல் செய்து, கைகாரு சீமை தீர்மானங்களுக்கு கட்டுபட்டு, அமைதியாக நடத்துவது என, ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதில், எஸ்.ஐ., ராஜன், ஆர்.ஐ., தீபக் வி.ஏ.ஓ., க்கள் ஜெயசுதா மற்றும் பிரபாகரன் உட்பட, கிராம தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.