சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2021 10:12
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடந்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மற்றும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன உற்சவம் நடந்து வருகிறது. ஆருத்ர தரிசன விழா 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூலவர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் நடராஜர் கோவில் தேரோட்டம் நடந்தது. முக்கிய விழாவான ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது.
அதிகாலை 3:00 முதல் 6:00 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின், திருவாபரண அலங்காரம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் வீதியுலாவை தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனமாடியபடி ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நடன பந்தல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலுக்குள் சுவாமிகள் சித்சபை ரகசிய பிரவேசம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.