பதிவு செய்த நாள்
24
டிச
2021
03:12
தஞ்சாவூர் : நாகை கோவிலில் இருந்து மாயமான இரண்டு பஞ்சலோக சிலைகள், 29 ஆண்டுகளுக்கு பின், மீட்கப்பட்டு, நேற்று, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே, சன்னியாசி பணங்குடி கிராமத்தில் உள்ள தாளரனேஸ்வரர் கோவிலில், கடந்த 1992ம் ஆண்டு, ஆடிப்பூர அம்மன், விநாயகர் பஞ்சலோக சிலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காணாமல் போனது.கூடுதல் எஸ்.பி., ராஜாராம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விசாரணை நடத்தி, 29 ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன ஆடிப்பூர அம்மன் சிலை, விநாயகர் சிலை ஆகியவற்றை மீட்டனர். அந்த இரண்டு சிலைகளையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சிலைகளை, நாகேஸ்வரன் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்குமாறு, நீதிபதி சண்முகப்ரியா உத்தரவிட்டார்.