பதிவு செய்த நாள்
24
டிச
2021
04:12
கோத்தகிரி: கோத்தகிரி காத்துகுளி பணிமனையில் நடந்த அருள்வாக்கு நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், படுகர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, இம்மாதம், 20ம் தேதி தொடங்கி, ஒரு வாரம் நடந்து வருகிறது. இவ் விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, கோத்தகிரி அருகே உள்ள காத்துகுளி மடிமனையில் ஹெத்தையம்மன் திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. காலை, 10:00 மணி முதல், அம்மன் அழைப்பு நிகழ்ச்சியை அடுத்து, அருள்வாக்கும், தொடர்ந்து, அன்னதானமும் நடந்தது. விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கலாச்சாரக் உடையுடன் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். விழாவின் ஒரு கட்டமாக, இன்று (சனிக்கிழமை) ஒன்னதலை மடிமனையில் திருவிழா சிறப்பாக நடக்கிறது. காலை, 11:00 மணிமுதல் அருள்வாக்கு நிகழ்ச்சியை தொடர்ந்து, அன்னதானம் நடக்கிறது.