பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
12:07
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு இயற்கையை பாதுகாக்கும் வகையில் 508 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆனித் தேர் திருவிழாவை முன்னிட்டு இயற்கையை பாதுகாக்கவும், புவி வெப்ப மயமாதலை தடுத்திடவும் அம்மா பசுமைப் புரட்சி நண்பர்கள் குழு சார்பில் 508 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளை ஹைதராபாத் கர்நாடக இசைக் கலைஞர் சந்திராபானு, சத்யசாய் பால குருகுலம் பள்ளியின் தாளாளர் கிருஷ்ணராவ் வழங்கினர். ஏற்பாடுகளை அம்மா பசுமை புரட்சி நண்பர்கள் குழு நிர்வாகிகள் விஜயசாரதி, சோமா கணேசன், ராஜா, ரமணன், ராஜேஷ், இசக்கி, சோமசுந்தரம், முருகன், சுப்பிரமணியன், ஆரோக்கியசாமி செய்திருந்தனர்.