பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
12:07
திருநெல்வேலி : சேரன்மகாதேவி முத்தாரம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 8ம் தேதி நடக்கிறது. குலாலர் சமுதாய முத்தாரம்மன் கோயிலில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடந்து முடிந்தன. கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 8ம் தேதி நடக்கிறது. கோயிலில் இன்று (6ம் தேதி) கும்பாபிஷேக பூஜைகள் துவங்குகின்றன. காலை 6 மணிக்கு மங்கள இசை, தேவாரம், திருமுறை பாராயணம், எஜமான அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், தன பூஜை, சுதர்சன ஹோமம், பாக்ய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. மாலையில் தாமிரபரணியில் இருந்து புனிதநீர் எடுத்து வருதல், இரவு வாஸ்துசாந்தி, யாகசாலை முதற்கால பூஜை நடக்கிறது. நாளை காலை இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை வேத பாராயணம், இரவு மூலவர் யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல், பிம்பசுத்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம் நடக்கிறது. 8ம் தேதி கும்பாபிஷேகம் 8ம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள், திருமுறை பாராயணம், புண்யாக வாசனம், ஸ்பர்சாகுதி, திரவ்யாகுதி, மகா பூர்ணாகுதி நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கும்பம் எழுந்தருளல், 11 மணிக்கு மேல் விமான கலசங்கள், மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் மகா அபிஷேகம், மகேஸ்வர பூஜை நடக்கிறது. மாலையில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்குழுவினர் செய்துள்ளனர்.