திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயார் உற்சவம் (ஸ்ரீரெங்கநாச்சியார் உற்சவம்) இன்று துவங்கியது,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்;படும். அதன்படி உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று(டிச.,25) சனிக்கிழமை முதல் பெரிய பிராட்டியார் என்ற ஸ்ரீரெங்கநாச்சியார் தாயாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வரும் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், இராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ஸ்ரீரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவத்தில் இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருள்வார். இராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித் திருநாள் 30ம் தேதி தொடங்கி வரும் 3ம்தேதி வரை நடைபெறுகிறது.