கம்பம்: கம்பம் பகுதியிலிருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பெண பக்தர்கள் நூற்றுக்கணக்கில் நேற்று தங்களது பாதபாத்திரையை துவக்கினார்கள்.
பழநி முருகன் கோயிலிற்கு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரை செல்கின்றனர். குறிப்பாக தைப்பூச நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பழநியில் திரள்வார்கள். கம்பம், க. புதுப்பட்டி, கூடலூர், அணைப்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவண்டன்பட்டி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து பக்தர்கள் பழநிக்கு ஆண்டுதோறும் செல்கின்றனர். இதற்கென கிராமங்களில் பாதயாத்திகர குமுக்கள் உள்ளன. நேற்று சுருளி அருவியிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் பாதயாத்திரையை துவக்கினர்கள். கூடலூர் சுருளிமலை பழநி பாதயாத்திரை குழுவினர் அரோகரா கோஷத்துடன் பாதயாத்திரையை துவக்கினார்கள்.