11 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய முறையூர் கோயில் தெப்பக்குளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2021 05:12
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் கிராம மக்களின் முயற்சியால் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பக்குளம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது.
சிங்கம்புணரி பகுதிக்கு வரும் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் இந்தாண்டு திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை கிராமங்களுக்கு செல்ல முடியாதவாறு கால்வாய்கள் சிதைந்தும் உடைந்தும் காணப்பட்டது. இந்நிலையில் முறையூர் பகுதிக்கு வரும் கால்வாய்களை அந்த கிராம மக்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு சீரமைத்தனர். கடும் போராட்டத்திற்குப் பிறகு 8 கி.மீ., தூரமுள்ள கால்வாயை சரி செய்து அப்பகுதி கண்மாய், ஊரணிகளுக்கு தண்ணீரை கொண்டு சென்றனர். இதனால் 11 ஆண்டுகளுக்குப் பிறகு முறையூர் மேல ஊரணியும், மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பக்குளமும் நிரம்பியுள்ளது. கால்வாயில் தண்ணீர் வந்ததால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.