ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசனம் செய்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. நேற்று, மார்கழி மாத செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனை நடந்தது. அம்மனுக்கு நான்கு கால யாக பூஜை நடந்தது. கோவை, திருப்பூர் பக்தர்கள் மட்டுமின்றி, மதுரை, சென்னை, திண்டுக்கல்லில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து, அம்மனை தரிசித்தனர்.