சூரியன், பார்வதி, திருமால், விநாயகர், சிவன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபடும் முறைக்கு ‘பஞ்சாயதன பூஜை’ என்று பெயர். நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கும் கல்லை சிவனாகவும், சுவர்ணமுகி ஆற்றில் கிடைக்கும் கல்லை சக்தியாகவும், நேபாளத்தில் இருக்கும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளகிராமக் கல்லை விஷ்ணுவாகவும், தஞ்சாவூர் வல்லத்தில் கிடைக்கும் ஸ்படிகத்தை சூரியனாகவும், கோணபத்ர ஆற்றில் கிடைக்கும் கல்லை கணபதியாகவும் கருதி பூஜிப்பர். இப்படி பல வடிவங்களில் கடவுளை வழிபட்டாலும் உலகில் இருப்பது ஒரே பரம்பொருள் தான். அதையே பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள்’ என்பதை ‘ஏகம் ஸத் விப்ராம் பஹுதா நாதாந்தி’ என வேதம் சொல்கிறது.