நள்ளிரவு கோயிலை திறந்தால் முற்றுகை: ஹிந்து மக்கள் கட்சி அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2021 03:12
வடமதுரை: ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு என்ற பெயரில் நள்ளிரவில் கோயில்களை திறந்தால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனஎன ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியது: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சார, பண்பாட்டு சீரிழிவு நடக்கிறது. நள்ளிரவில் குடித்துவிட்டு வீதியில் கும்மாளமிடும் செயல்கள் அதிகமாகி வருவது வேதனைக்குரியது. இதோடு சில ஆண்டுகளாக கோயில்களையும் நள்ளிரவில் திறந்து பூஜை செய்யும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவது ஆகம விதிகளுக்கு புறம்பானது. அறநிலையத்துறை மூலம் இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் கோயில்களையும் திறக்க அனுமதிக்க கூடாது. ஆங்கில புத்தாண்டிற்காக இன்றிரவு கோயில் திறக்கப்பட்டால் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்’ என்றார்.