Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நந்தி ரூபத்தில் மஹாவிஷ்ணு சிவனை ... மசினி அம்மன் கோவில் காளை உயிரிழப்பு அஞ்சலி செலுத்திய பக்தர்கள் மசினி அம்மன் கோவில் காளை உயிரிழப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாமக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

04 நவ
2026
10:11

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.


வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதன் தொடர்ச்சியாக, முக்கிய விழாவான பூவோடு எடுக்கும் உற்சவம் நேற்று காலை, தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி, கையில் அக்னி பூச்சட்டியை ஏந்தியபடி பிரகாரத்தை வலம் வந்தார். அப்போது கோவிலில் திரண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன், தாங்கள் கொண்டு வந்த காணிக்கையான நாணயங்களை பூச்சட்டிக்குள் போட்டனர். இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள், பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் நேர்த்திக்கடன் நடந்தது. கையில் நீண்ட சாட்டையை வைத்திருந்த கோவில் பூசாரி, வரிசையில் காத்திருந்த பக்தர்களின் கைகளிலும், உடலிலும் சாட்டையால் ஓங்கி அடித்தார். பக்தர்கள் உடலை வருத்தி வாங்கும் இந்த சாட்டையடி மூலம், பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் அகலும் என்றும், நீண்ட நாள் நோய்கள் மற்றும் தீராத பிணிகள் நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பெண்கள், ஆண்கள், கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, நீண்ட வரிசையில் காத்திருந்து பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். பின்னர், பக்தர்கள் அம்மனை தரிசித்து, வழிபாடுகளை நிறைவு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்தில் வரும் நவ. 13ம் தேதி ராகு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கேரளாவின் கொடுங்களூர் அருகே ஜடாயுமங்கலம் என ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் ஜடாயுவுக்கு ... மேலும்
 
temple news
கம்பம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு, மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை ஏராளமான பக்தர்கள் சுருளி ... மேலும்
 
temple news
திருச்செந்துார்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா இரண்டாவது நாள் யாகசாலை பூஜையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar