பதிவு செய்த நாள்
09
ஜூலை
2012
11:07
கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபியில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. பவுர்ணமி, சஷ்டி போன்ற விஷேச நாட்களில், இங்கு தங்க தேரோட்டம் நடக்கிறது. கோவிலில் கொடிமரம் பழமையானதால், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய ஸ்வாமி, விநாயகர், சேவல், மயில் ஆகிய உருவங்களுடனான புதிய கொடிமரம் நிறுவனப்பட்டது. கொடி மரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பிரதிஷ்டை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, மிருத்ரசங்கரணம், முதல் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, வேதிகா அர்ச்சனை, நாடி சந்தானம், கலச அபிஷேகளுக்கு பூஜை நடந்தது. பின், கொடி மரத்துக்கு பல்வேறு வகையான பூக்கள் மூலம் அபிஷேகத்துடன், புனித நீர் ஊற்றப்பட்டது.திருப்பணி குழுத்தலைவர் ஈஸ்வரன், செயல் அலுவலர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.